தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் காதல் நாயகனாக நடித்திருக்கும் ' லவ் இன்சூரன்ஸ் கம்பனி' ( Love Insurance Kompany) எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்த பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.
பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் இன்சூரன்ஸ் கம்பனி' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா இவர்களுடன் இயக்குநர், நடிகர், அரசியல்வாதி, சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் - செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வழங்குகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி முப்பத்தி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'லவ் டுடே', 'டிராகன்' என பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இரண்டு திரைப்படங்களும் இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதால் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்திலும் , திரையுலகினரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் 'டியூட் 'எனும் திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் வேறு வழி இல்லாமல் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் செப்டம்பரில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM