மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE) பட முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

12 May, 2025 | 03:37 PM
image

மிகப்பெரிய வெற்றிகளையும், மிகப்பெரிய தோல்விகளையும் சமமாக அளித்தாலும் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அதீத அன்பு பாராட்டும்'மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி மாஸான கொமர்சல் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் - சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் வெளியிட்டனர்.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஏஸ்' எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன்-  சாம் சி. எஸ். ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 Cs என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆறுமுக குமார் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ' ஏஸ் ' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் வழக்கமான கொமர்சல் திரைப்படங்களில் இடம்பெறும் அனைத்து சுவைகளும் தவறாது அதே வரிசையில் இடம் பிடித்திருப்பதால்  ரசிகர்களிடம் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்