bestweb

மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

12 May, 2025 | 03:05 PM
image

கண்டி - கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பில்மீகம பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

எவ்வாறிருப்பினும், விற்பனை நிலையத்தில் இருந்த 20 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கடுகண்ணாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52