பூமிகா சாவ்லா - யோகி பாபு நடிக்கும் 'ஸ்கூல்'

Published By: Digital Desk 2

12 May, 2025 | 03:08 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகரான யோகி பாபு - திருமணத்திற்கு பிறகும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து நற்பெயரை சம்பாதித்து இருக்கும் நடிகை பூமிகா சாவ்லா - ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ' ஸ்கூல்' எனும் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதியன்று வெளியாகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஆர்.கே. வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்கூல் ' எனும் திரைப்படத்தில் பூமிகா சாவ்லா , யோகி பாபு , கே. எஸ். ரவிக்குமார், நிழல்கள் ரவி, பக்ஸ் , சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி ' இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை குவாண்டம் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். கே. வித்யாதரன் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படக் குழுவினருக்கு கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான உபேந்திரா படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்