பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டியூட் ( DUDE) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

12 May, 2025 | 03:07 PM
image

'லவ் டுடே ', ' டிராகன்' என தொடர்ந்து இரண்டு நூறு கோடி ரூபாய் வசூல் செய்த ஹிட் படத்தை அளித்து  ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு, 'டியூட் ' ( DUDE) எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமீதா பைஜூ , சரத்குமார்,  ரோகிணி , ஹிர்து ஹாரூன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இளம் தலைமுறை ரசிகர்களுக்கான படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை ரவிசங்கர் ஆகியோர்  இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான பிரதீப் ரங்கநாதன் கையில் இந்து மதத்தில் திருமணமான பெண்களுக்கு புனிதமான கலாச்சார சின்னமாக திகழும் தாலியை வலது கையில் அவமதிப்பது போல் வைத்துக் கொண்டு தோற்றமளிப்பதால் இளம் தலைமுறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.‌

இதனுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள மற்றொரு பிரத்யேக புகைப்படத்தில் கதையின் நாயகனான பிரதீப் ரங்கநாதன் மேலாடை இல்லாமல் கவர்ச்சியாகவும் அருகில் அவருடைய காதலியாக தோன்றும் பெண்- நாயகி பாரம்பரிய உடையில் தோற்றமளிப்பதும் ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவது போல் இருப்பதாக இணையவாசிகள் பின்னூட்டம் பதிவிட்டு இதனையும் வைரலாக்கி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்