இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி காரணமாக, துறைமுகங்களுக்கு மேலதிக கப்பல்கள் வருவதற்கான கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றவண்ணம் உள்ளன. அவற்றை வினைத்திறனுடன் கையாள்வதற்கும் தற்போதைய செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் செயல்படுவதை உறுதி செய்வதற்கும் காணப்படும் இயலுமைகள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
துறைமுகங்கள் போன்றே விமான நிலையங்களும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உலகளாவிய அரசியல் சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி துறைமுகம் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களின் முனைய (Terminal) அதிகாரிகள், கப்பல் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சுங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM