வெசாக் அலங்காரத்தில் ஈடுபட்ட சிறுமி மின்சாரம் தாக்கி பலி

12 May, 2025 | 02:41 PM
image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் களுத்துறை, மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமி ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சம்பவத்தன்று உயிரிழந்த சிறுமி வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை பல வர்ண மின்குமிழ்களால் அலங்கரித்துக்கொண்டிருந்துள்ளார்.

பின்னர் இந்த சிறுமி பல வர்ண மின்குமிழ்களுக்கு மின்சாரத்தை வழங்க முயற்சித்த போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சிறுமி பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் வேிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் வெற்றியல்ல...

2026-07-20 12:24:27
news-image

மர்மமான உயிரிழப்புக்கக்களை தற்கொலை என்று அடையாளப்படுத்த...

2026-07-20 14:27:32
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்திற்கு விழும்...

2026-07-20 14:28:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பது தொடர்பில்...

2026-07-20 20:19:51
news-image

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சிகிச்சை; கடத்தல்காரர்களுக்கு கடும்...

2026-07-20 14:51:24
news-image

அனில் ஜயந்த பெர்னாண்டோ பெயரில் பரவும்...

2026-07-20 15:13:37
news-image

நெல்லுக்கு அதிக விலையால் நுகர்வோரே அதிகம்...

2026-07-20 15:33:04
news-image

நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புமாறு ஜனாதிபதியிடம்...

2026-07-20 15:51:34
news-image

இலங்கையானது ஒரு குற்றவியல் அரசாகவே செயற்பட்டு...

2026-07-20 17:37:04
news-image

ஒருசில விடயங்களை பகிரங்கப்படுத்தப் போவதில்லை -...

2026-07-20 20:18:52
news-image

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை நேரில்...

2026-07-20 17:39:03
news-image

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 33% ஆக...

2026-07-20 17:39:44