கனடாவின் பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை,என தெரிவித்துள்ளகனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிட்டா நாதன் நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான நினைவூட்டல் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நேற்றைய தினம் அர்த்தபூர்வமானதாகஅமைந்தது,தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை திறக்கும் நிகழ்வில் நான் எனது சமூகத்தவருடன் இணைந்துகொண்டேன்.
கனடிய தமிழர் தேசிய அவைக்கும்,பிரம்டன் தமிழ் சங்கத்திற்கும் மேயர் பட்ரிக் பிரவுனிற்கும் நகரத்தின் கவுன்சிலர்களிற்கும் இந்த நினைவுத்தூபியை சாத்தியமாக்கிய சமூக அமைப்புகள் தலைவர்களிற்கும் நான் நன்றியுடையவளாக உள்ளேன்.
இந்த சக்திவாய்ந்த இடம் தமிழர் இனப்படுகொலையின் நீடித்த அடையாளமாக திகழ்கின்றது,இழக்கப்பட்ட உயிர்கள், துண்டாடப்பட்ட சமூகங்கள் பலர் அனுபவித்த வேதனைகளிற்கான அடையாளமாக திகழ்கின்றது.
மேலும் இது தமிழ் சமூகத்தினர் மத்தியில் காணப்படும்,வலிமை மீள் எழுச்சி தன்மை நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தையும் பிரதிபலிக்கின்றது.
மே மாதம் கனடா தமிழர்களிற்கு ஒரு வேதனையான குறிப்பிடத்தக்க மாதமாகும்,உயிரிழந்தவர்களையும் தப்பியவர்களையும்,அவர்கள் அனுபவித்தவற்றின் அதிர்ச்சிகளை தொடர்ந்து சுமந்துகொண்டிருப்பவர்களையும் நாம் நினைவுகூரும்போது,இந்த நினைவுச்சின்னம் அவர்களின் நினைவை போற்றுவதற்கும்,வெறுப்பிற்கு எதிராக எழுந்து நின்று மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு பொறுப்பு குறி;த்து சிந்திப்பதற்குமான ஒரு இடத்தை வழங்குகின்றது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடு கனடா,அவர்களின் பங்களிப்பு கனடாவை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளது.
இந்த நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை,நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான நினைவூட்டல் எனஅவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM