அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு, கருணை, இரக்கம், பொறுமை ஆகியவற்றை வளர்க்கும் உன்னத மானுடப் பண்புகள் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமையட்டும் - பிரதமர்

12 May, 2025 | 09:47 AM
image

அனைத்து உயிரினங்கள்  மீதும் அன்பு, கருணை,  இரக்கம் மற்றும் பொறுமை ஆகியவற்றை வளர்க்கும் உன்னத மானுடப் பண்புகள் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமையட்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வெசாக் வெசாக் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில்,

புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, பௌத்த தத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து புத்தபெருமானை வழிபட இலங்கையின் பௌத்த மக்கள் ஒன்றுகூடும் இந்த வெசாக் காலத்தில், நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வெசாக் வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கையர்களாகிய எமது வாழ்க்கை பண்டைய காலங்களிலிருந்தே பௌத்த தத்துவத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது புத்த சமயத்திலிருந்து எமக்குக் கிடைத்த பரிசு. எமது நாட்டில், பல்வேறு இனங்கள், பல்வேறு சமயங்களைப் பின்பற்றி, நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழ்ந்து வருவதுடன், அனைவரும் ஒன்றுசேர்ந்து வெசாக் பண்டிகை போன்ற ஒரு முக்கியமான சமயப் பண்டிகையைக் கொண்டாடுவது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

"வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள எமது அரசாங்கத்தின் கீழ் இது முதலாவது வெசாக் பண்டிகையாகும். எமது நாடு சரியான மாற்றத்தை நோக்கி பயணித்து வரும் இச்சந்தர்ப்பத்தில், மனித உள்ளங்களை ஆற்றுப்படுத்த இந்த வெசாக் காலம் மிகவும் பொருத்தமானது என்பது எனது நம்பிக்கையாகும். அந்த நோக்கத்திற்காக நாம் அனைவரும் ஒருமனதுடனும் ஒற்றுமையாகவும் கைகோர்ப்போம் என எனது இந்த வெசாக் செய்தியின் ஊடாக உங்கள் அனைவரையும் அழைக்க இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

இந்த வெசாக் பண்டிகைக் காலத்தில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது எரிந்து கொண்டிருக்கும் போர்ச் சூழல்கள் தணிந்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழும் சூழல் உருவாக வேண்டும் என்று அனைத்து இலங்கையர்களுடனும் சேர்ந்து நான் பிரார்த்தனை செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய வெசாக் வாழ்த்துக்கள்! மும்மணிகளின் ஆசீர்வாதங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின்...

2025-06-22 13:10:38
news-image

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு...

2025-06-22 13:08:11
news-image

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித...

2025-06-22 13:02:04
news-image

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

2025-06-22 13:06:03
news-image

பல்துறைசார் வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வாருங்கள்...

2025-06-22 13:03:51
news-image

செம்மணி மனிதபுதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐநா...

2025-06-22 12:36:49
news-image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ்...

2025-06-22 12:38:09
news-image

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை...

2025-06-22 11:58:41
news-image

ஈரானில் 37 இலங்கையர்கள் உள்ளனர் ;...

2025-06-22 12:02:33
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் கைக்குண்டு, போதைப்பொருளுடன் சந்தேக நபர்...

2025-06-22 12:03:12
news-image

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா?...

2025-06-22 11:22:24
news-image

கொஹுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...

2025-06-22 10:56:34