யாழில் உறவினரின் வீட்டில் திருமண விருந்து உண்டுவிட்டு திரும்பிய கணவன் மரணம்!

Published By: Vishnu

12 May, 2025 | 02:36 AM
image

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் 10ஆம் திகதி சனிக்கிழமை உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது சுழிபுரம் - பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கு கடந்த 09.04.2025 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் சனிக்கிழமை (10) உறவனர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருமண விருந்து உண்டுவிட்டு வீடு வந்தவேளை வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில் வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றும் வாந்தி குணமாகவில்லை. 

பின்னர் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-06-19 16:13:46
news-image

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலையால் நமது...

2025-06-19 16:23:28