இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர்நிறுத்தம் : ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை

Published By: Vishnu

12 May, 2025 | 01:36 AM
image

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும் மக்களும் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன.

பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரைத் தாக்கியதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறுகிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல நாட்களாக நடந்து வந்த சண்டை முடிவுக்குக் கொண்டு வர, 10ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

இதற்கிடையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும் மக்களும் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான முடிவு இரு தரப்பிலும் உள்ள அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்ல, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய படியாகும். 

இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் உரையாடலை ஆதரிப்பதாகவும், நமது சொந்த காலத்தில் பிராந்திய அமைதியை அடைவதற்குத் தேவையான எந்தவொரு பங்களிப்பையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரலகங்வில பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-06-22 14:40:07
news-image

ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இஸ்ரேலில்...

2025-06-22 14:39:29
news-image

யாழில் பல்வேறு குற்றச்செயல்களை புரிந்த மூவர்...

2025-06-22 14:07:15
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின்...

2025-06-22 13:10:38
news-image

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு...

2025-06-22 13:08:11
news-image

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித...

2025-06-22 13:02:04
news-image

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

2025-06-22 13:06:03
news-image

பல்துறைசார் வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வாருங்கள்...

2025-06-22 13:03:51
news-image

செம்மணி மனிதபுதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐநா...

2025-06-22 12:36:49
news-image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ்...

2025-06-22 12:38:09
news-image

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை...

2025-06-22 11:58:41
news-image

ஈரானில் 37 இலங்கையர்கள் உள்ளனர் ;...

2025-06-22 12:02:33