இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பாப்பரசர் லியோ வரவேற்றுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாப்பரசர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார் என்று கார்டினல்கள் அறிவித்தனர்.
புதிய பாப்பரசராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் பொதுமக்கள் முன் உரையாற்றினார்.
குறித்த உரையிலேயே உலகம் முழுவதும் உள்ள அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
உக்ரைன் மற்றும் காஸாவில் அமைதி ஏற்பட வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார். உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.
பாப்பரசர் பிரான்சிஸ் கூறிய விடயங்களை எதிரொலிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பாப்பரசர் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்கும்படி வேண்டி கொள்கின்ற அதேவேளை பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM