விடுதலைமிக்க, சமத்துவம் கொண்ட சமூகங்களை எம் நாட்டில் உருவாக்க பௌத்த போதனைகள் நமக்கு விடிவெள்ளியாக அமையும் - வெசாக் வாழ்த்துச் செய்தியில் சபாநாயகர்

Published By: Digital Desk 3

11 May, 2025 | 10:22 PM
image

பௌத்த போதனைகளினால் வரையறுக்கப்பட்ட மிகவும் பொருத்தமான, விடுதலைமிக்க மற்றும் சமத்துவம் கொண்ட சமூகங்களை எமது நாட்டில் உருவாக்குவதற்கு பௌத்த போதனைகள் நமக்கு விடிவெள்ளியாக அமையும் என்று  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன  வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உலகில் மிகவும் பழமைவாய்ந்த மத மெய்யியல்களில் ஒன்றான பௌத்த தருமத்தை உலகுக்கு அறிமுகப்படுத்த கௌதம புத்த பெருமானின் வாழ்க்கைய நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம் இன்றாகும்.

இது சர்வதேச ரீதியில் மாத்திரமன்றி எமது நாட்டின் சமூக கலாசாரத்தின் அடிநாதமாக பௌத்த மதத்தின் தாக்கங்கள் காணப்படுவதால் முக்கிய மத மற்றும் கலாசாரதினமான இன்று இலங்கையர்களாகிய எமக்கும் சிறப்பான நாளாகும்.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் அப்போதிருந்த தம்பதீப பீடபூமியில் சமூக ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவுகளில் வர்க்க மற்றும் சாதி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து நல்லிணக்கம், அஹிம்சை மற்றும் சமத்துவத்திற்கான சமூக விடுதலையத் தேடிச் செல்லும் பாதையை ஆன்மீக ரீதியாக அவர் தனது போதனைகள் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறினார்.

தற்பொழுது காணப்படும் சிக்கல் நிறைந்த சமூகச் சூழலில் உள்ள பல நெருக்கடிகளுக்குப் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிவதற்கான வழிகள் புத்த பெருமானின் போதனைகளில் புதைந்துள்ளன என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

இருந்த போதிலும் இன்று எமது சிக்கலான சமூக வாழ்க்கையால் உருவாகியுள்ள சூழ்நிலைகள் காரணமாக புத்த பெருமான் போதித்த நீதியான ஆன்மீகப் பாதைகள் மற்றும் அந்த இலட்சியப் பாதையை அடைவதற்கான வழிகள் தடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமைகள் காரணமாக பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் கூட பௌத்த மதத்தினால் வளர்க்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்குப் பல தடைகள் உருவாகியுள்ளன. எனவே இதற்குப் பொருத்தமான சமூக, அரசியல் மற்றும் சிறந்த கலாசாரச் சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என நாம் நம்புகின்றோம்.

எனவே, பௌத்த போதனைகளினால் வரையறுக்கப்பட்ட மிகவும் பொருத்தமான, விடுதலைமிக்க மற்றும் சமத்துவம் கொண்ட சமூகங்களை எமது நாட்டில் உருவாக்குவதற்கு பௌத்த போதனைகள் நமக்கு விடிவெள்ளியாக அமையும்.

எனவே, சமூகம் என்ற ரீதியில் கௌதம புத்த பெருமான் போதித்த ஆன்மீக விடுதலை மற்றும் சமூக விடுதலையை நாம் அடைவதற்கான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதுடன், இன்றையதினம் வெசாக் தினத்தைக் கொண்டாடும் இலங்கை பௌத்த மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரலகங்வில பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-06-22 14:40:07
news-image

ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இஸ்ரேலில்...

2025-06-22 14:39:29
news-image

யாழில் பல்வேறு குற்றச்செயல்களை புரிந்த மூவர்...

2025-06-22 14:07:15
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின்...

2025-06-22 13:10:38
news-image

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு...

2025-06-22 13:08:11
news-image

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித...

2025-06-22 13:02:04
news-image

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

2025-06-22 13:06:03
news-image

பல்துறைசார் வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வாருங்கள்...

2025-06-22 13:03:51
news-image

செம்மணி மனிதபுதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐநா...

2025-06-22 12:36:49
news-image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ்...

2025-06-22 12:38:09
news-image

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை...

2025-06-22 11:58:41
news-image

ஈரானில் 37 இலங்கையர்கள் உள்ளனர் ;...

2025-06-22 12:02:33