மாலியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­ப டும் அல் கொய்தா தீவி­ர­ வா­திகள் தம்மால் பண­யக்­கை­தி­க­ளாக பிடித்து வைக்­ கப்­பட்­டுள்ள 6  வெளி­நாட்­ட­வர்கள் தோன்றும் புதிய காணொளிக் காட்­சி­யொன்றை வெளியிட்­டுள்­ளனர்.

பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன்  அந்­நாட்­டுக்கு விஜயம் செய்­துள்­ள­தை­யொட்­டியே இந்தக் காணொளிக் காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி பண­யக்­கை­தி­களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச சார்­பற்ற தொண்டு ஸ்தாப­னத்தின் பணி­யாளர், அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த வயோ­திப சத்­தி­ர­சி­கிச்சை நிபுணர் ஒருவர் மற்றும் கொலம்­பிய கன்­னி­யாஸ்­திரி ஆகியோர் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

அவர்களை விடு­தலை செய்­வ­தற்கு உண்­மை­யான பேச்­சு­வார்த்­தைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என அந்தக் காணொளிக் காட்சியில் குற்றஞ்சாட்டப்பட் டுள்ளது.