நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்பட வெசாக் தினத்தில்  அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் - வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி 

Published By: Digital Desk 3

11 May, 2025 | 10:35 PM
image

புத்தரின் போதனைகளின் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு, பொதுநலத்தில் சமத்துவம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கி "வளமான நாடு -  அழகான வாழ்க்கை" பற்றிய இந்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக நாம் இன்னும் உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு இந்த புனிதமான வெசாக் தினத்தில்  அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.

புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது,  இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும்.

அவர் அனைத்து துன்பங்களையும் தாங்கி, ஆயுள் முழுவதும் தன்னலமற்ற பக்தி செயல்கள் மூலம் புரிந்து கொள்ளப்பட்ட தர்மம், உலகில் வசிக்கும் அனைத்து மக்களின் ஆன்மீக நல்வாழ்விற்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது.

மதச் சூழலுக்குள் மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பதே புத்த பெருமானின் முக்கிய செய்தியாகும். மேலும், ஒரு ஆட்சியாளர்  நல்ல ஆட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் பௌத்த தத்துவம் குறிப்பிடுகிறது.

"சப்பங் ரத்தங் சுகங் சேதி - ராஜாசே ஹோதி தம்மிகோ"  ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று புத்த பெருமான் உபதேசித்துள்ளார்.

புத்தரின் போதனைகளின் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு, பொதுநலத்தில் சமத்துவம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கி "வளமான நாடு -  அழகான வாழ்க்கை" பற்றிய இந்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக நாம் இன்னும் உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு இந்த புனிதமான வெசாக் தினத்தில்  அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிப்பதோடு, அந்தப் போதனைகளை நடைமுறையில் புரிந்துகொண்டு, மெத்தா, கருணா, முதிதா, உபேக்ஷா ஆகிய நான்கு பிரஹ்ம விஹாரணங்களைப் பயன்படுத்தி செயல்படுவதன் மூலம், போரின் தீப்பிழம்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தர்மத்தின் ஞானத்தால் அனைத்து இதயங்களையும் ஒளிரச் செய்யும்  புனித வெசாக் தினமாக அமையட்டும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக...

2025-06-19 18:25:17
news-image

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தைச்...

2025-06-19 18:23:33
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22