அரசாங்கத்துக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு நிபந்தனையின்றி ஒத்துழைப்பு வழங்கத் தயார் ; ஐக்கிய மக்கள் சக்தி

10 May, 2025 | 07:51 PM
image

(எம்.மனோசித்ரா)

பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சிகளின் வாக்குகள் இலட்சத்தில் அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் வாக்குகள் மில்லியன்களில் குறைவடைந்துள்ளன.  இதனை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் பாடுபட்டு வருகிறது.

வாக்களிப்பு வீதம் குறைவடைந்துள்ளதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அவ்வாறெனில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் எவ்வாறு அதிகரித்தன?

அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் ஒழுக்கத்திலிருந்தும் விலகி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மாத்திரமின்றி தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் கூட கைவிடப்பட்டிருக்கின்றன. மக்கள் வழங்கியுள்ள செய்தி தொடர்பில் அரசாங்கம் இதனை விட ஆழமாக சிந்திக்க வேண்டும்.

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி விவகாரத்தில் சந்தேகநபர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது

சில சந்தேகநபர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, சிலர் குற்றப்புலனாய்வு பிரிவில் சென்று முறைப்பாடளிக்கின்றனர். 

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் இது குறித்து தனக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று கூறுகின்றார்.

உயிரிழந்த மாணவிக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் முன்னிலையாக வேண்டிய அமைச்சர் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மாத்திரம் முன்னிலையாகியுள்ளார். 

இதே நிலைமை தொடர்ந்தால் இந்த அரசாங்கத்தால் தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாது. அரசாங்கம் அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக அல்லது ஒரு வருடமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலைமையிலேயே உள்ளது.

பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. 

ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்டால் உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகும்.

தாய் கூறிய பொய்களால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. சபைகளை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. விரைவில் அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்று நம்புகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45