இன்றைய சூழலில் எம்முடைய மனதில் எழும் விடயங்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு மொழி ஆளுமை அவசியம் என்பதை அனைவரும் அறிவோம்.
அதே தருணத்தில் எம்முடைய எண்ணங்களை உரக்கச் சொல்லும் பேச்சிற்கும் அதாவது வாக்கிற்கும் வலிமை வேண்டும். அப்போதுதான் எம்முடைய பேச்சை மற்றவர்கள் கவனிப்பார்கள்.
கேட்பார்கள். ஏற்றுக் கொள்வார்கள் பின்பற்றுவார்கள். அதே தருணத்தில் இன்று நாம் சமூக வலைதள பக்கங்களில் பிரபலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.
எம்முடைய தோற்றம் வடிவாக இருந்தாலும் எம்முடைய பேச்சில் வன்மையும், வலிமையும் இருக்க வேண்டும். பலர் இந்த விடயத்தில் தான் சூட்சமங்களை அறிந்து கொள்ளாமல் தோல்விகளை தொடர்கிறார்கள்.
நீங்கள் பேசும் பேச்சு மற்றவர்களின் கவனத்தைக் கவர வேண்டும். இதற்கு நீங்கள் உங்களுடைய எண்ணங்களை சொற்களாக வடிவமைப்பதை விட அதனை அதற்குரிய மொழி நடையில் அதாவது பிரத்யேக ஒலி குறிப்பில் உச்சரிக்கும் போது தான் முழு வலிமையை பெறுகிறது.
இந்த சூட்சமம் சிலருக்கு மட்டுமே கைவர பெறுகிறது. பலருக்கு வருவதில்லை. இத்தகைய நபர்களுக்கு உதவுவதற்காக என்னுடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பை சொல்லி இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : பனங்கற்கண்டு, தண்ணீர், பால்.
நீங்கள் மேடைப் பேச்சாளராக திகழ வேண்டும் என்றாலோ அல்லது நீங்கள் அலுவலகத்தில் உங்களது உரையாடலை மற்றவர்கள் யாரும் குறுக்கீடு செய்யாமல் முழுமையாக கேட்க வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது நீங்கள் ஒருவருக்கு வாக்குறுதி தருவதாக இருந்தாலும் உங்கள் வாக்கு வன்மையாக இருப்பதுடன் அவை பலிதமாக வேண்டும்.
அதாவது சாத்தியமாக வேண்டும். இதற்கு நாளாந்தம் இரவு நேரத்தில் உறங்குவதற்கு இரண்டு மணி தியாலம் முன்பாக பால்மா,தண்ணீர்,பனங்கற்கண்டு, மூன்றையும் இணைத்து சாப்பிட வேண்டும் அல்லது பனங்கற்கண்டு வாயில் போட்டு மெல்லலாம்.
அதே தருணத்தில் நீங்கள் மேடையில் பேசப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன்னதாக பனங்கற்கண்டை சுவைக்க வேண்டும். அதன் பிறகு பேசினீர்கள் என்றால் உங்களுடைய வாக்கில் தெளிவும், நிதானமும் இருக்கும்.
பல பிரபலங்கள் பொதுவெளியில் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தைக் கவர்வதற்கு பிரத்யேக முத்திரை பயிற்சி மேற்கொண்டு இருந்தாலும் அவர்களும் உரையாற்றுவதற்கும் முன் பனங்கற்கண்டை சாப்பிடுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM