பத்து ஆண்டுகளுக்கு முன் விமல் - எழில் கூட்டணியில் உருவாகி, வெளியாகி, வெற்றி பெற்ற 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரபல இயக்குநரான எஸ். எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ' தேசிங்கு ராஜா 2 'திரைப்படத்தில் விமல், ஜனா, புஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, புகழ் , மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ் , வையாபுரி , 'லொள்ளு சபா' சாமிநாதன், மதுரை முத்து ,மதுமிதா, விஜய் ரிவி வினோத் என தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஆர் . செல்வா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். முழு நீள பொழுதுபோக்கு படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 11- ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தன்னுடைய திரையுலக பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து ஃபேமிலி என்டர்டெய்னர்களை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கும் இயக்குநர் எஸ். எழில் இயக்கத்தில் 'தேசிங்கு ராஜா 2' உருவாகி இருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM