நடிகர் விமல் நடிக்கும் ' பரமசிவன் பாத்திமா' படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

10 May, 2025 | 03:07 PM
image

தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நடிகரான விமல் - கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பரமசிவன் பாத்திமா ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'நா மல்லி' எனும் புதிய பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பரமசிவன் பாத்திமா' எனும் திரைப்படத்தில் விமல், சாயா தேவி, எம். எஸ். பாஸ்கர், கூல் சுரேஷ், வீர சமர், மனோஜ் குமார், ஆதிரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'நா மல்லி யார்றா கில்லி..' எனத் தொடங்கும் புதிய பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் ஏகாதசி எழுத பின்னணி பாடகி பிரியா ஹேமேஷ் பாடியிருக்கிறார்.

கிராமிய பின்னணியிலான திருமண வைபவ கொண்டாட்ட பாடலாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து...

2025-05-15 18:56:52
news-image

ஜூன் மாத இறுதியில் வெளியாகும் விஜய்...

2025-05-15 18:59:04
news-image

ஜூலையில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்'

2025-05-15 18:59:25
news-image

லெவன் - திரைப்பட விமர்சனம்

2025-05-15 19:00:26
news-image

இரசிகர்களின் ஆதரவைக் கோரி ஜூலையில் களமிறங்கும்...

2025-05-15 16:36:22
news-image

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’: சிக்கலில் சந்தானம்

2025-05-15 16:17:26
news-image

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

2025-05-15 13:58:26
news-image

ஜூனில் வெளியாகும் விமலின் 'பரமசிவன் பாத்திமா'

2025-05-14 16:56:52
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'காயல்' பட...

2025-05-14 16:55:55
news-image

வரலட்சுமி சரத்குமாரின் 'தி வெர்டிக்ட்'

2025-05-14 19:23:41
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும்...

2025-05-14 16:07:51
news-image

“டூரிஸ்ட் ஃபெமிலி கனவை நனவாக்கியுள்ளது” -...

2025-05-14 16:07:37