இம்மாற்றல் '( IMMORTAL ) படத்திற்காக இசை அசுரனுடன் இணைந்த 'டிராகன் ' நாயகி

Published By: Digital Desk 2

10 May, 2025 | 03:10 PM
image

இசையமைப்பாளராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வரும் ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ' இம்மாற்றல் ' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் 'இம்மாற்றல்' எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்,  கயாடு லோகர் , ஆதித்யா கதிர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஃபெண்டஸி திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏகே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''எந்தவித மாற்றமும் இல்லாமல் இயல்பாக செல்லும் ஒரு இளைஞனின் வாழ்வில் திடீரென்று எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகிறது. அதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதை கொமர்சல் அம்சங்களுடன் படத்தை உருவாக்கி வருகிறோம்'' என்றார்.

'டிராகன்' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான இளமை ததும்பும் மங்கையான நடிகை கயாடு லோகர்- ஜீ.வி பிரகாஷ் குமாருடன் இணைந்து நடிக்கிறார் என்பதாலும் படத்தின் தலைப்பு 'இம்மாற்றல்' என்று இருப்பதாலும் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து...

2025-05-15 18:56:52
news-image

ஜூன் மாத இறுதியில் வெளியாகும் விஜய்...

2025-05-15 18:59:04
news-image

ஜூலையில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்'

2025-05-15 18:59:25
news-image

லெவன் - திரைப்பட விமர்சனம்

2025-05-15 19:00:26
news-image

இரசிகர்களின் ஆதரவைக் கோரி ஜூலையில் களமிறங்கும்...

2025-05-15 16:36:22
news-image

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’: சிக்கலில் சந்தானம்

2025-05-15 16:17:26
news-image

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

2025-05-15 13:58:26
news-image

ஜூனில் வெளியாகும் விமலின் 'பரமசிவன் பாத்திமா'

2025-05-14 16:56:52
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'காயல்' பட...

2025-05-14 16:55:55
news-image

வரலட்சுமி சரத்குமாரின் 'தி வெர்டிக்ட்'

2025-05-14 19:23:41
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும்...

2025-05-14 16:07:51
news-image

“டூரிஸ்ட் ஃபெமிலி கனவை நனவாக்கியுள்ளது” -...

2025-05-14 16:07:37