நடிகர் தமண் குமார் நடிக்கும் 'ஜென்ம நட்சத்திரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

10 May, 2025 | 02:42 PM
image

கடந்த ஆண்டில் வெளியான ' ஒரு நொடி' எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உயர்ந்த தமண் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஜென்ம நட்சத்திரம் 'என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சசிகுமார் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் மணி வர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜென்ம நட்சத்திரம் ' எனும் திரைப்படத்தில் தமண் குமார், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா , ரக்ஷா ஷெரின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

கே. ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு 'ஜென்ம நட்சத்திரம்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்-  ஏற்கனவே இதே பெயரில் வெளியான திரைப்படத்தின் வகைமையை நினைவு படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right