இயக்குநர்,நடிகர், அரசியல்வாதி என பன்முக தன்மையுடன் பொதுவெளியிலும் , பொது மக்களிடத்திலும் புகழ்பெற்ற சீமான் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' சீமானின் தர்மயுத்தம் ' எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை சீமானின் அன்புத் தம்பிகளான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர்கள் சுந்தர் சி ,சீனு ராமசாமி , சேரன், ஹெச். வினோத், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சசிகுமார், பிரதீப் ரங்கநாதன், சூரி , நடிகை கஸ்தூரி ஆகியோர் அவர்களுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஆர். சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகி வரும் ' சீமானின் தர்மயுத்தம்' எனும் திரைப்படத்தில் சீமான், அனு சித்தாரா, ஆர். கே. சுரேஷ், இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இன்வெஸ்ட்டிகேட் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் மற்றும் பிளானட் 9 பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆதம் பாவா மற்றும் மருத்துவர் ஆர். கே. சிவக்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
செந்தமிழன் சீமான் காவல்துறை சீருடை அணிந்து நடித்திருப்பதாலும், படத்தின் தலைப்புடன் ' தீர விசாரிப்பதே மெய் ' என்ற வாசகமும் இடம் பிடித்திருப்பதால் படத்தை பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டு இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM