ஜீ. வி. பிரகாஷ் குமாரின் குரலில் ஓங்கி ஒலிக்கும் 'புலி கொடி எங்க கொடி'

Published By: Digital Desk 2

10 May, 2025 | 02:33 PM
image

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதாநாயகனாக நடித்திருக்கும் ' படையாண்ட மாவீரா 'எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'புலிக்கொடி எங்க கொடி' எனும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' படையாண்ட மாவீரா' எனும் திரைப்படத்தில் வ. கௌதமன் , சமுத்திரக்கனி, 'பாகுபலி 'பிரபாகர் , சரண்யா பொன்வண்ணன்,  'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் என ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விகே புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நிர்மல் சரவண ராஜ் - எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'புலிக்கொடி எங்க கொடி' எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து எழுத, பின்னணிப் பாடகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். தமிழர்களின் வரலாறை பேசும் இந்த பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right