இன்றுவரை வெளி மனிதர்கள் உள் நுழைய முடியா பயங்கர தீவு…!

10 May, 2025 | 12:43 PM
image

உலகிலேயே மிகவும் ஆபத்தானதும், வெளி மனிதர்கள் எவரும் நெருங்க முடியாததும், முற்றிலும் தனிமைப்படுத்திக் கொண்ட மனிதர்கள் வசிக்கும் தீவுமான சென்டினல் தீவு, உலகின் மிக ஆபத்தான தீவாகவும் அறியப்படுகின்றது.

இது வங்காள விரிகுடாவில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒன்றாகும். ஜாவா சுமத்ரா தீவுகளில் இருந்து நேர் கோட்டில் ஒரு கந்தல் துணி போல இத்தீவு கூட்டம் அமைந்து கிடக்கும் அழகே தனிதான் எனலாம்.

இத்தீவில் வாழும் மக்கள், வெளியுலகினர் எவரையும் அங்கு அனுமதிப்பதில்லை. அவர்கள் என்ன மொழியில் பேசுகின்றனர் என்று கூட எவரும் அறிந்ததில்லை.

மேலும், மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய மரபணு சோதனையில், இவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்று அறியப்படுகின்றது. அதாவது, புதிய கற்காலத்திற்கு முன்பு வாழ்ந்த மக்களாம் இவர்கள்.

ஆரம்பத்தில் இங்கு வந்த இம்மக்கள், எந்தவொரு மாற்றமும் இன்றி அப்படியே வாழ ஆரம்பித்தனராம். அதாவது இவர்களுக்கு, விவசாயம் தெரியாது. தீ மூட்டத் தெரியாது. வெறும் கற்கால வேடுவர்கள் இவர்களே. இடுப்பில் ஒரு பட்டி. மற்றபடி நிர்வாணமாகவே அலைந்து திரிபவர்கள்.

அதேசமயம் இவர்கள், நெருப்புக்காக மின்னல் மூலம் பரவும் காட்டுத் தீயை எடுத்து வந்து, அணையாமல் வைத்துக் கொள்கிறார்கள். சிறு சிறு பறவைகள், விலங்குகளை வேட்டையாடி உண்கின்றனர். கிடைக்கும் தேன், காய்கறிகள் பழங்கள், கிழங்கு வகைகள், கடலில் கிடைக்கும் சிறுவகை மீன்கள், நண்டுகள் என அனைத்தையும் பச்சையாகவே உண்கின்றனராம்.

மேலும், 60 ஆயிரம் ஆண்டுகளாக வெளி மனித தொடர்பு எதுவும் இல்லாது தனிமைப் படுத்தப்பட்டதால், மனிதனுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி இவர்களிடம் இல்லை. எனவே இவர்களது ஆயுட்காலம் மிகவும் குறைவு. அதிகபட்சம் 40 வயது என்கின்றனர். சிறு புற்கள், இலைகளால் வேயப்பட்ட கூம்பு வடிவ குடிசைகளில் வாழ்கின்றனர்.

பிரிட்டிஷ் கொலனிய ஆதிக்கத்தின் போது, இத்தீவு மக்களை நாகரிகமாக மாற்ற வேண்டும் என்று இராணுவத்தின் ஒரு குழு, இத் தீவில் இறங்கியது. உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டிருந்தனர். ஒரேயொரு வயதான தம்பதியர் மற்றும் நான்கு குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களை பிடித்து அழைத்துக் கொண்டு வந்தனர். இருப்பினும், சில நாட்களில் அனைவரும் நோய்வாய்ப்பட்டு, பெரியவர்கள் இருவரும் இறந்து போக, வேறு வழியின்றி குழந்தைகளை மீண்டும் அத்தீவுக்கு கொண்டு சென்று, பரிசுப் பொருட்களுடன் விட்டு வந்தனராம்.

மேலும், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு தண்டனை கைதி, அங்கிருந்து ஒரு படகில் தப்பியோடி, சென்டினலிஸ் கடற்கரையில் தஞ்சம் அடைந்திருக்கின்றான். இந்நிலையில், அவனைத் தேடிய வீரர்களுக்கு தொண்டை அறுபட்ட நிலையில் அந்த கைதியின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்தன. இதன் பிறகு சுமார் 100 ஆண்டுகள் வரை அந்த இடத்திற்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே, இந்திய அரசால் மானுடவியல் குழு ஒன்று இத்தீவு க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களை தொடர்பு கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆனால் உள்ளே இறங்கியதும் யாரும் இருக்கவில்லை. சுமார் 18 குடிசைகள், எரியும் தீ, பன்றிகள், மீன் பிடி வலை, மர வாளிகள், ஈட்டிகள் செதுக்கப்பட்ட எச்சங்கள் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்தன.

வேறு வழியின்றி படகுகளை அடைந்து அவர்களை கவனித்தபோது, ஆணவத்துடன் தங்கள் ஆணுறுப்பை அசைத்தும், மலம் கழிக்கும் தோரணையில் பின் புறத்தை காட்டியும், அதாவது அவர்கள் வந்தவர்களை அவமானப் படுத்துகிறார்களாம். பின் வழக்கம் போல ஈட்டிகள் அம்புகளால் தாக்குதல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதைக் கண்ட குழு, வந்த வழியே திரும்பி சென்றதாம்.

இதற்குப் பின்னர், எத்தனையோ குழுவினர் இந்த தீவுக்குள் செல்ல முயற்சித்த போதும், இன்று வரை யாராலும் உள்ளே செல்ல முடியவில்லை.

இறுதியாக, 'ஜோன் எலன் சாவ்' என்ற 26 வயது அமெரிக்க இளைஞர் ஒருவரும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். சாகச செயல்களில் ஈடுபடுபவரான இவர், கிறிஸ்தவ சபை ஒன்றின் ஊழியராகவும் விளங்கினார். இவர் இந்த தீவின் ஆதிவாசிகளுக்கு, மதப்போதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இங்கு செல்ல எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இறுதியாக அவரையும் தாக்கிக் கொன்றனர் அந்த தீவு மக்கள், 

அப்போது, அந்த சென்டினல் மக்கள் தொகை ஐம்பது முதல் 200 வரை என்று கூறிய நிலையில், இன்று இவர்களது எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இருப்பினும், இவர்களின் தற்போதைய நிலை என்ன, இவர்கள் என்ன செய்கிறார்கள் என இன்றும் புரியாத புதிராகவே உள்ளது சென்டினல் தீவு…!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39
news-image

வலியவனுடன் மோதும் எளியவன்: வைரலாகும் மான்குட்டி...

2026-01-11 14:18:36
news-image

1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ்...

2025-12-25 13:00:17
news-image

மேத்யூ ஹைடனின் நகைச்சுவை சவால்

2025-12-06 21:48:31