நுவரெலியாவில் தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்

10 May, 2025 | 02:12 PM
image

வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகர் முழுவதும் வெசாக் பந்தல்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பெளத்த விஹாரைகளில் மத வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

அதன்படி இன்று சனிக்கிழமை (10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

வெசாக் தின வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களின்  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றும் பெரஹராவும் நடைபெறவுள்ளது.

நுவரெலியாவில் நடைபெறும் தேசிய வெசாக் பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து நலன் கருதி வெள்ளிக்கிழமை (09) முதல் கொழும்பில் இருந்து பதுளை வரையில்  விசேட  ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும்...

2026-07-10 20:04:01
news-image

சிறைச்சாலை அனர்த்தம் அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது...

2026-07-10 12:46:16
news-image

கந்தளாயில் டிப்பர் - மோட்டார் சைக்கிள்...

2026-07-10 19:57:00
news-image

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்:...

2026-07-10 19:51:18
news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31