பொலிஸ் அதிகாரிகள், பாதாளக்குழுக்கள் பற்றிக் கூறுவதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் - தயாசிறி ஜயசேகர

Published By: Vishnu

09 May, 2025 | 07:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஒருசில பொலிஸ் அதிகாரிகள் பணத்துக்காக பாதாள குழுக்களுக்கு தகவல்களை வழங்குகின்றனர். சிலர் பாதாள குழுக்களை பாதுகாக்கின்றனர். போதைப்பொருளையும் பாதுகாக்கின்றனர். சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. படுகொலைகள் தற்போது நாளாந்த செயற்பாடாக மாறியுள்ளது. இதனை பாராளுமன்றத்தில் குறிப்பிடுவதால் எனது உயிருக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் அதனுடனான உயிரிழப்புகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் விசேட கூற்றை முன்வைத்து கேள்வியெழுப்புகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகளில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுவது தொடர்பில்  கடுமையாக பேசியதுடன், தமது ஆட்சியில் சட்டவாட்சியை உறுதி செய்வோம் என்று கூறியிருந்தார். ஆனால் கடந்த 7 மாதங்களில் 43 .இற்கும் அதிகமான  துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளதுடன்,.அவற்றில் 30 இற்கும் அதிகமானோர்     உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த நாட்டின் சட்டவாட்சி வீழ்ச்சியடைந்து வீதிகளில் மக்கள் கொல்லப்படுகின்றனர்.

தினமும் வீதிகளிலும், வீடுகளுக்குள்ளும் கொலை சம்பவங்கள் பதிவாகுகின்றன. பாதாள குழுக்கள் மோதிக் கொள்கின்றனர். மேலும் பாதாள குழுக்களின் ஊடாக மற்றையவர்களும் கொல்லப்படுகின்றனர். தென் மாகாணத்திலும் மேல் மாகாணத்திலுமே அதிகளவான சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டின் பாதுகாப்பும் மற்றும் சட்டவாட்சியும் அழிவை நோக்கி போகின்றது. இவற்றை இங்கு பேசுவதால் எனது உயிருக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

ஒருசில பொலிஸ் அதிகாரிகள் பணத்துக்காக பாதாள குழுக்களுக்கு  தகவல்களை வழங்குகின்றனர். சிலர் பாதாள குழுக்களை பாதுகாக்கின்றனர். போதைப் பொருளையும் பாதுகாக்கின்றனர். சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. சிறைச்சாலையில் உள்ள தொலைபேசிகளை கைப்பற்றும் போது இந்த நிலைமை ஏற்படுகின்றது.இந்த நிலைமை மேலும் அதிகரிக்கின்றது. எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

யுக்திய நடவடிக்கையின் போது பாதாள குழுக்களின் முக்கிய தரப்பினர் தலைமறைவாகயிருந்தனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்தனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்துகெண்டு கொலைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதேவேளை அப்பாவிகளும்  உயிரிழக்கின்றனர். இதில் நெருக்கடிகளுக்குள் நாடு தள்ளப்படுகின்றது. போதைப் பொருட்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் தடுமாறுகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றோம்.

இதேவேளை  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.  தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கும் நீதியரசர் குழாமின் நீதியரசர் இந்த சிறப்புக் குழுவின்  தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். அ இது சிக்கலுக்குரியது. உயர்நீதிமன்றத்தை சேர்ந்த ஒருவர் இங்கே சட்டங்களை தயாரிக்கும் போது நாங்கள் எங்கே போவது. நாங்களே சட்டத்தை தயாரிக்க வேண்டும். நீங்கள் முறைமை மாற்றத்தை எவ்வாறு செய்யப் போகின்றீர்கள் என்று தெரியவில்லை.

2024 செப்டம்பர் மாதம் முதல் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய தூப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் எவ்வளவு இடம்பெற்றுள்ளது என்றும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு,இவ்வாறான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? இதனை தடுப்பதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை கேட்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைக்கு நீதியும் பொறுப்புக்கூறலும்...

2026-07-10 16:29:24