அமைச்சர் பிமல் தனது கருத்தை உடன் மீளப்பெற வேண்டும் ; சபையில் சிறிதரன் எம்.பி வலியுறுத்து

09 May, 2025 | 08:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை தமிழரசுக் கட்சி மக்களுக்கு கசிப்பையும் பணத்தையும்  வழங்கியே  உள்ளூராட்சிமன்றத்  தேர்தலில்  வெற்றிபெற்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ள கருத்து  முறையற்றது.  நிராகரிக்கத்தக்கது. இந்தக் கருத்தை  அவர் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென இலங்கை  தமிழரசுக்  கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான    சிவஞானம் சிறிதரன்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற  முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை குறைத்தல் தொடர்பான தனிநபர்  பிரேரணை மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நடைபெற்று   முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி கசிப்பு மற்றும் பணத்தை வழங்கியே வென்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க முறையற்ற வகையில்  குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த  கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். அவர் அந்தக்  கருத்தை மீளப் பெற வேண்டும். 

உண்மையான நியாயமான ஜனநாயகவாதியாக இருந்தால் அவர் அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சியற்ற இனவாதமற்ற அரசியலை இந்த நாட்டில் செய்ய விரும்புகின்றார் என்றால் மற்றும் இனங்களை மதிக்கின்றார் என்றால் தன்னுடைய அந்த கருத்தை அவர் வாபஸ்  பெற வேண்டும்.

1940 ஆம் ஆண்டில் தமிழரின் தேசியத் தந்தை செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்டு 27 வருடங்களாக கிடப்பில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சி  2004ஆம் ஆண்டில்  தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனால் வெளியில் கொண்டுவரப்பட்டு தமிழரின் தேசிய அடையாளமாக தரப்பட்ட கட்சி .

ஒருகாலமும் தமிழரசுக் கட்சி எவருக்கும் மதுவை கொடுப்பதையோ, மதுவுக்கான அனுமதிகளை பெறுவதற்கோ அல்லது மதுபானசாலைகளை திறப்பதற்கோ சம்மதம் தெரிவித்த கட்சியுமல்ல, அதற்காக உடந்தையாக இருந்த கட்சியுமல்ல. அதேபோன்று நாங்கள் பணம் கொடுத்து வாக்கு பெற்றவர்களும் அல்ல.

ஒரு தேசிய இனத்தினுடைய அடையாளத்தை அவர்களின் இருப்பை, அவர்கள் இந்த மண்ணிலே வாழ வேண்டியதற்கான வாழ்க்கை முறையை இழந்த இறைமையை மீட்பதற்காக போராடுகின்ற, தனித்துவமான இனத்தினுடைய விடுதலை இயக்கமே இலங்கை தமிழரசுக் கட்சி. எனவே எங்களுடைய கட்சி சார்பாக பொறுப்புடன், எங்களுடைய கட்சி அவ்வாறாக கசிப்போ, பணமோ வழங்குகின்ற கட்சி அல்ல என்பதனை மீண்டும் பதிவு செய்கின்றேன் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45