மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்தொழிலில் ஈடுப்பட்ட 5 பேர் நேற்று முன்தினம் கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட வலைகள், 2 படகுகள் மற்றும் பிடிக்கபட்டுள்ள 37.5 கிலோகிராம் மீன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொருட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.