இயக்குநர் - நடிகர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட 'மையல்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

09 May, 2025 | 03:53 PM
image

'மைனா' படத்தின் மூலம் தமிழ் திரையுலக இரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் சேது. இவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மையல் ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை இயக்கத்தில் உருவாகியுள்ள மையல் திரைப்படத்தில் சேது, சம்ரித்தி தாரா, ரத்னகலா, பி எல் தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, சி எம் பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் எஸ்.அமரகீத் இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைப்பாளர் சௌந்தர்யனின் வாரிசு என்பது கவனிக்கத்தக்கது.

கிராமிய பின்னணியில் யதார்த்த மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஐகான் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஆர்.வேணுகோபால் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், ஆர். வி. உதயகுமார், பேரரசு , ஆர். கே. செல்வமணி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் சிறப்பு அதிதியாக படக்குழுவினருடன் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஏழுமலை பேசுகையில், ''இப்படம் உருவானதற்கு முழுமுதற் காரணம் கதையின் நாயகனான சேது தான். அவர்தான் தயாரிப்பாளரை தேடி கண்டறிந்து இப்படத்தின் பணிகளை தொடங்கினார். இப்படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும். நான் 'சேரன் பாண்டியன்' படத்தின் பாடல்களுக்கு இரசிகன். இதன் காரணமாகவே இப்படத்தில் இசையமைப்பாளர் சௌந்தர்யனின் மகன் அமர கீத்திற்கு வாய்ப்பளித்து அவரை அறிமுகப்படுத்துகிறேன். இந்தப் படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. இந்தப் பாடல்கள் வெற்றி பெற்றது போல் படமும் வெற்றி பெறும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் 'லவ்...

2025-05-12 16:16:01
news-image

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் 'மரகத மலை'

2025-05-12 15:55:10
news-image

டொவினோ தோமஸ் - சேரன் இணைந்து...

2025-05-12 15:54:48
news-image

குற்றவாளிகளின் உளவியல் அழுத்தங்களை விவரிக்கும் 'மனிதர்கள்'...

2025-05-12 15:37:46
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் 'ஏஸ்'...

2025-05-12 15:37:24
news-image

பூமிகா சாவ்லா - யோகி பாபு...

2025-05-12 15:08:01
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டியூட் (...

2025-05-12 15:07:41
news-image

யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி நடித்ததில்...

2025-05-11 13:22:42
news-image

விமல் நடிக்கும் ' தேசிங்கு ராஜா...

2025-05-10 15:21:27
news-image

நடிகர் விமல் நடிக்கும் ' பரமசிவன்...

2025-05-10 15:07:12
news-image

இம்மாற்றல் '( IMMORTAL ) படத்திற்காக...

2025-05-10 15:10:34
news-image

ஃப்ரீடம்' படத்தில் மீண்டும் ஈழ ஏதிலியாக...

2025-05-10 14:42:57