இஷ்ட தெய்வங்களின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான சூட்சும குறிப்பு ..!?

09 May, 2025 | 02:46 PM
image

எம்மில் பலரும் நாளாந்தம் ஏதேனும் ஒரு தொழிலில் கடுமையாக உழைத்தாலும் பலன் என்பது வெவ்வேறு ஆகத்தான் கிடைக்கிறது. இதன் பின்னணி தெரியாமல் நாம் அவதிப்படுகிறோம். சிலருக்கு மட்டும் குறைவாக உழைத்தாலும் கூட நிறைவாக பலன்களை பெற்று உச்சகட்ட மகிழ்ச்சியை தொடுகிறார்கள். இதற்கான ரகசியத்தை- சூட்சமத்தை அவர்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.

இந்தத் தருணத்தில் அவர்களை தொடர்ந்து ஒரு மாத காலம் துல்லியமாக அவதானித்தால்.. இதன் பின்னணியில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சுட்டிக்காட்டிய சூட்சம குறிப்பு ஒன்று இருப்பதை உணரலாம்.

அதுதான் தேவதாரு. எம்முடைய வீட்டிற்கு அருகே உள்ள நாட்டு மருந்து கடைகளிலும், ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் நிலையத்திலும் தேவதாரு மரத்தின் பட்டைகள் துண்டுகளாக விற்பனைக்கு கிடைக்கும்.

இதில் சிறிய அளவிலான துண்டு ஒன்றினை வாங்கி அதனை வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் எடுத்து, கல்லின் மீது இழைத்தால், அதிலிருந்து நெற்றியில் திலகம் இடும் அளவிற்கு பவுடர் கிடைக்கும். அதனை நெற்றியில் திலகமாக பூசிக்கொண்டு நீங்கள் வெளியில் சென்றால்.. உங்களுக்கான அன்றைய பலன்கள் அனைத்தும்  சாதகமாகத்தான் நிகழும். ஏனெனில் தேவதாரு என்ற மரம் தேவர்களை வசியப்படுத்த கூடியது.

இதன் தூளை அல்லது சிறிய துண்டை நீங்கள் எப்போதும் உடன் வைத்திருந்தால் உங்களுக்கான அதிர்ஷ்டம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.‌ உங்களது வாடகை வீடோ அல்லது சொந்த வீடு வாஸ்து குறைபாடுடன் இருந்து, அதனால் பல விவரிக்க இயலாத சங்கடங்களுக்கு முகம் கொடுத்து வந்தால்.. இந்த தேவதாரு மரக்கன்றை உங்களுடைய வீட்டு வளாகத்தில் பதியமிட்டு வளருங்கள்.

அத்துடன் சிறிய அளவிலான தேவதாரு மர துண்டினை எப்பொழுதும் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வாஸ்து குறைபாடு மறைந்து லாபம் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களில் ஏற்பட்ட மாய தடைகள் விலகும். இஷ்ட தெய்வத்தின் பரிபூரண அருளுடன் குலதெய்வத்தின் அருளும் கிடைத்து,  வாழ்க்கையின் உயர் நிலையை எட்டலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-12 14:13:00
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..!?

2026-06-11 17:16:42
news-image

பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்..?

2026-06-10 16:42:14
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-06-09 18:14:07
news-image

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான பிரத்யேக...

2026-06-08 17:05:52
news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16
news-image

தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான...

2026-06-01 14:30:17
news-image

ஜுன் மாத ராசி பலன்கள் -...

2026-05-31 10:28:57
news-image

பண வரவு தடையின்றி அதிகரிக்க பாவிக்கவேண்டிய...

2026-05-30 15:04:08