இளைய திலகம் பிரபு - வெற்றி இணைந்து நடிக்கும் 'ராஜபுத்திரன்' பட டீஸர் வெளியீடு

09 May, 2025 | 02:46 PM
image

தமிழ் சினிமாவில் புதிதாக உருவாகும் இளம் படைப்பாளிகளின் நட்சத்திர நடிகர்களுக்கான விருப்ப தெரிவில் முதன்மையானவராக இடம் பிடித்திருக்கும் 'இளைய திலகம்' பிரபு - சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நாயகன் வெற்றி ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் 'ராஜபுத்திரன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மகா கந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராஜபுத்திரன்' எனும் திரைப்படத்தில் பிரபு, வெற்றி,  கிருஷ்ண பிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், இமான் அண்ணாச்சி, தங்கதுரை, லிவிங்ஸ்டன், கோமல் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஐஸ் நஃவால் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. எம். ஷபி தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கிராமத்தில் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் பிரபு, பொறுப்பற்ற தன் மகனுக்காக களமிறங்கும் காட்சிகள் உணர்வுபூர்வமாகவும், அதிரடியாகவும் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கமல்ஹாசன் – விஜய் சந்திப்பு :...

2026-05-16 18:36:29
news-image

கருப்பு - திரைப்பட விமர்சனம்

2026-05-16 17:48:03
news-image

சட்டென்று மாறுது வானிலை - திரைப்பட...

2026-05-16 19:55:02
news-image

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட...

2026-05-16 19:55:24
news-image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட 'பாரீஸ்...

2026-05-16 19:56:41
news-image

சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கும்...

2026-05-16 20:37:57
news-image

அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் அப்டேட்

2026-05-16 19:57:16
news-image

ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய் ஆண்டனியின்...

2026-05-16 19:57:33
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'கட்டா குஸ்தி...

2026-05-16 19:57:49
news-image

ஜியோ ஹொட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும்...

2026-05-16 19:58:20
news-image

எண்பதுகளின் கிராமத்து காதல் கதையை சொல்லும்...

2026-05-16 19:58:46
news-image

சிவாஜி கணேசனின் வசனத்துக்காகவே வரலாறு படைத்த...

2026-05-16 14:11:23