ரஷ்யாவில் பஸ்ஸொன்று ட்ரக் வண்டியுடன் மோதி இன்று விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

சமரா பிராந்தியத்திலிருந்து இஸிவ்ஸ்க் பிராந்தியத்துக்கு பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.ட்ரக் வண்டியுடன் மோதியதையடுத்து அந்த பஸ் உருண்டு சென்று தீப்பற்றி எரிந்துள்ளது. 

ரஷ்யாவானது உலகில் மோசமான வீதி விபத்தகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாகவுள்ளது. கடந்த வருடம் அந்நாட்டில் வீதி விபத்துகளில் 20,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.