ஆசனப்பட்டி அணிந்திருக்காமையினால் கார் விபத்திற்குள்ளாகிய வேளையில் காரிலிருந்து சாரதி தூக்கி எறியப்பட்ட காணொளியொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சீனாவில் இடம்பெற்ற குறித்த வாகனவிபத்தில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளமை அனைவரையும் வியப்புக்குள்ளாகியுள்ளது.

காரில் ஆசனப்பட்டி அணிந்திருக்காமையினாலே குறித்த சாரதி காரை விட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார். காயமுற்ற சாரதி மற்றும் பயணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.