bestweb

இலங்கையின் மீன்பிடித் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சீன ஷாண்டோங் மாகாண பிரதிநிதிகள் குழுவுடன் விசேட கலந்துரையாடல்

09 May, 2025 | 10:53 AM
image

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகர மேயர்  ஜெங் டெயான்  தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் வியாழக்கிழமை (08) கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன தூதுக்குழுவினர், குறிப்பாக கடற்றொழில் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக கடற்றொழில் அமைச்சுக்கு வருகை தந்திருந்தனர். இது இலங்கையின் மீன்பிடித் துறைக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக கருதப்படுகின்றது.

இங்கு, அமைச்சு அல்லது நிறுவன மட்டத்தில் நிறைவேற்றுவதற்கு கடினமான, உயர் தொழில்நுட்பம் மற்றும் கணிசமான மூலதனம் தேவைப்படும் பெரிய அளவிலான திட்டங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். 

இதற்கு சீன பிரதிநிதிகள் குழுவினர் தமது ஆர்வத்தை தெரிவித்தனர். எதிர்காலத்தில் இரு தரப்பினரும் ஒன்றிணைந்து இது குறித்து மேலும் கலந்துரையாடி, முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு அதன் மூலம் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இணக்கம் தெரிவித்தனர். 

சீனாவின் ஷாண்டோங் மாகாணம் மீன்பிடித் தொழில் சார்ந்து, குறிப்பாக நீர்வாழ் உயிரின வளர்ப்பு (Aquaculture) துறையில் உயர் தொழில்நுட்பத்தையும் வளர்ச்சியையும் அடைந்த ஒரு மாகாணமாகும். கடலில் நிறுவப்பட்டுள்ள பாரிய கூண்டு முறைமைகளில் மீன் வளர்ப்பு அங்கு மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. 

அதற்காக நவீன தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் கடல் எல்லைக்குள் இவ்வாறான பாரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இதுவரை அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளின் அளவு மிகவும் குறைவாகும். 

எமது பரந்த கடல் எல்லையை அடிப்படையாகக் கொண்டு, இந்த உயர் தொழில்நுட்பம் கொண்ட கூண்டு மீன் வளர்ப்பு முறை இலங்கைக்கு மிகவும் வெற்றி அளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல் தொடரின் முதலாவது சந்திப்பு நிறைவுற்றது. இந்த கலந்துரையாடல்களை தொடர்ந்தும்  நடத்தி, இரு தரப்பினரும் ஒன்றிணைந்து மிகவும் வெற்றிகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52