இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடங்களாக 78 ஓட்டங்கள் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

டோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 322 சிக்ஸர்களை அடித்துள்ளார்.