வெண்புகை வெளியேறியது ; புதிய பாப்பரசர் தெரிவானார்!

Published By: Vishnu

08 May, 2025 | 10:03 PM
image

வெண்புகை வெளியேறியது புதிய பாபரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடியிருந்த 133 கார்தினால்கள் ஒன்று கூடிய புதிய பாப்பரசரை தெரிவு செய்துள்ளனர்.

புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் விரைவில் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மையப் பகுதியினூடாக மக்களுக்கு தோன்றுவார்.

புதிய பாப்பரசரை  தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது.

முதலில் இடம்பெற்ற வாக்குப் பதிவுக்குப் பின்னர் சிஸ்டைன் சிற்றாலயத்துக்கு மேல் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதன்  அர்த்தம் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவில்லை என்பதாகும்.

இந்நிலையில், 2ஆவது தடவையாகவும்  சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு மேல் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. ஏனெனில், இதுவரை ஒரு புதிய பாப்பரசரை தெரிவு செய்யவில்லையென்பதே அர்த்தம்.

இதையடுத்து 3 ஆவது தடவையாகவும் பாப்பரசரை தெரிவு செய்யும் வாக்குப் பதிவு இடம்பெற்ற நிலையில், தற்போது வெண்புகை வெளியேறியுள்ள நிலையில், புதிய பாப்பரசர் தெரிவாகியுள்ளார்.

பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். அவரது திரு உடல் 26ஆம் திகதி ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54