முட்டையில்லாமல் பிரௌனி செய்வது எப்படி என்று பார்ப்போம்.....
தேவையான பொருட்கள்
- டார்க் சாக்லேட் - 1 கப் (200 கிராம்)
- உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப்
- மைதா - 3/4 கப்
- கோகோ பவுடர் - 1/3 கப்
- பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- சர்க்கரை - 3/4 கப்
- வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
- கெட்டி தயிர் - 3/4 கப்
- சாக்லேட் சிப்ஸ்
- வால்நட்ஸ்
செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். பின்பு அதின் மேல் மற்றோரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் கரையும் வரை கலந்துவிடவும்.
2. பின்பு சாக்லேட்டை இறக்கி வைத்து அதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
3. பின்பு தயிர் சேர்த்து கலந்துவிடவும்.
4. சல்லடையில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.
5. பிறகு சாக்லேட் கலவையில் சலித்த மாவை சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
6. பின்பு கேக் அச்சில் பட்டர் பேப்பரை வைத்து அதில் தயார் செய்த மாவை ஊற்றி சமன் செய்யவும்.
7. ஓவனை 180 டிகிரியில் சூடு செய்து மாவை வைத்து 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.முட்டையில்லாத பிரௌனி தயார்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM