பயனுள்ள பாட்டி குறிப்புகள்..!

08 May, 2025 | 05:25 PM
image

அக்கி, அம்மை என்று சொல்லக்கூடிய, தோலில் ஆங்காங்கே ஏற்படும் கொப்பளத்துக்கு, கரையான் புற்று மண்ணை நீரில் நன்றாக கரைத்து, இறைவனை வேண்டி, காலையிலும், மாலையிலும் காயம் ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வர, அக்கி குணமாகிவிடும். 

அதிகப்படியான வெயில் காரணமான, உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு அடிக்கடி, "நீர் சுலுக்கு" ஏற்படக்கூடும். அதாவது எப்பொழுதும் சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டு கொண்டே இருக்கும். இருப்பினும் கழிக்க முடியாது. அந்த இடத்தில் வலியும் ஏற்படும். இதனையே "நீர் சுலுக்கு" என்பார்கள். இப்பிரச்சினைக்கு, இரண்டு சின்ன வெங்காயங்களை மென்று முழுங்கிவிட்டு உடனே கொஞ்சம் தண்ணீர் அருந்தினால், சிறந்த தீர்வு கிடைக்கும்.

உதட்டில் வலி, வெடிப்பு ஏற்பட்டால், சிறிது வெண்ணெய்யை உதட்டின் மேல் பூசி வர, நிறந்தர தீர்வு கிடைக்கும்

வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் எழுந்த உடன் அந்த வெந்தய தண்ணீரை பருகினால் அல்சர் குணமாகும்.

மணத்தக்காளி கீரைச் செடியில் கருப்பு நிறத்தில் பழுக்கும் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும் வயிற்று புண் விரைவில் சுகமாகும்.

ஒரே இடத்தில் கை கால்களை மடக்கி அசையாமல் உட்கார்ந்திருந்தால் கை கால்களுக்கு இரத்தம் போகாமல் மறுத்து போனது போலாகி "விற்றென்று " கை, கால் விறைக்க ஆரம்பித்து, ஒரு அறை மணி நேரத்திற்கு நடக்க முடியாமல் போய்விடும். இதனை "மரக்கோலி" என்பார்கள். இவ்வாறு ஏற்பாட்டால் தண்ணீரை மறத்து போன இடத்தில் ஊற்றினால் உடனே தீர்வு கிடைக்கும்.

மழைக்காலத்தில் வெளியில் அடிக்கடி நடப்பதால் காலில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு சேற்றுப்புண் ஏற்படக்கூடும். இதற்கு, ஒரு கொள்கலனில் நீருடன் உப்பு + மஞ்சள் தூளை சேத்து கொதிக்க வைத்து மிதமான வெப்பத்தில் காலை அந்த நீரினுள் ஊறவைத்தால், சேற்று புண் விரைவில் சரியாகிவிடும்.

கொதிக்க வைத்த பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து குடித்து வர, சளித்தொல்லையால் தொண்டையில் ஏற்பட்ட "கறகறப்பு" சரியாகும். அல்லது, தூதுவளை இலையை அறைத்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், இதற்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-20 17:09:46
news-image

குரல் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-07-18 16:04:06
news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11