கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக ஒன்று திரண்ட பொதுமக்கள் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி குறித்த பாடசாலையை முற்றுகையிட்டு இன்று (8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மேல் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர், குறித்து சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபரிடம் விளக்கம் கோரப்படும் என்றும், சந்தேக நபரான ஆசிரியர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்படுவார் என்றும், மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை அறிக்கை கிடைத்தபின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM