ஹெமிபரேசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

08 May, 2025 | 03:07 PM
image

எம்மில் பலருக்கு நாளாந்த நடவடிக்கையில் உடலின் ஒரு பகுதியில் அதாவது வலது பகுதியிலோ அல்லது இடது பகுதியிலோ ஆடைகளை அணிவது... பசியாறுவது... நடப்பது... போன்றவற்றில் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் ஹெமிபரேசிஸ் என குறிப்பிடுகிறார்கள். இதனை அக்யூட் ஸ்ட்ரோக் என்றும் குறிப்பிடலாம். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது எர்கோதெரபி என்ற சிகிச்சை அறிமுகமாகி நிவாரணம் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய உடலில் ஒரு பகுதியில் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவோ அல்லது ஏற்பட்ட பிறகோ உடலில் ஒரு பகுதியில் அதாவது வலது பகுதியிலோ அல்லது இடது பகுதியிலோ தசை பலவீனத்தின் காரணமாக உடல் இயக்கத்தை இயல்பாக மேற்கொள்ள இயலாது. இதில் பாரிய தடைகளும் , குறைபாடுகளும் உண்டாகும். வலது அல்லது இடது புறத்தில் உள்ள கைகள், கால்கள் மற்றும் முகத்தில் உள்ள தசைகளில் பலவீனம் ஏற்படுவதே இதற்கு காரணம். இந்த ஒரு பக்கத்தில் ஏற்படும் தசை பலவீனம் பாதிக்கப்பட்டவரின் இயக்கத்தை சீர்குலைக்கிறது.

எம்மில் பலருக்கும் ஹெமிபரேசிஸ் எனும் பாதிப்பிற்கும், ஹெமிபிலீஜியா எனும் பாதிப்பிற்கும் வித்தியாசத்தை உணர்வதில்லை. இதில் ஹெமிபரேசிஸ் என்பது தசை பலவீனத்தால் ஏற்படும் ஒரு பகுதி பக்கவாதம் என்பதையும், ஹெமிபிலீஜியா என்பது முழுமையான பக்கவாத பாதிப்பு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

எம்முடைய மூளையில் உள்ள திசுக்களுக்கு போதிய அளவு ஓக்சிஜன் கிடைக்காத காரணத்தினால் அங்குள்ள செல்கள் தங்களுடைய இயங்குத்திறனை இழக்கின்றன. இதனால் திசுக்கள் சேதம் அடைந்து இறக்கத்தொடங்குகின்றன. இதனால் தசைகள் பலவீனம் அடைந்து பக்கவாத பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உடலின் வலது அல்லது இடது புறத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால், முகம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் நடப்பதற்கும், நிற்பதற்கும் அசௌகரியங்கள் உண்டாகும். மன பாதிப்பையும் ஏற்படுத்தும்.

இதற்கு வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் தூண்டல் சிகிச்சை, நரம்பியல் செயல்பாட்டு மீட்டுருவாக்க திறன் சார்ந்த சிகிச்சை, எர்கோ தெரபி, இயன்முறை சிகிச்சை, றொபாட்டிக் முறையிலான சிகிச்சை என பல சிகிச்சைகளை பிரத்யேகமாகவும் , ஒருங்கிணைந்தும் வழங்கி நிவாரணத்தை தருவார்கள்.

வைத்தியர் - அருண்

தொகுப்பு - அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பிற்கான...

2026-06-12 14:16:00
news-image

அஸ்பெர்கில்லோமா எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-06-11 17:22:11
news-image

உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை...

2026-06-10 16:00:56
news-image

க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் எனும் முழங்கை...

2026-06-09 18:18:06
news-image

இதய செயலிழப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் இம்பெல்லா...

2026-06-09 07:16:20
news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15