bestweb

மாற்று வீரர்களைக் கொண்டு கொல்கத்தாவை பணியவைத்தது சென்னை

08 May, 2025 | 10:17 AM
image

(நெவில் அன்தனி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இரண்டு பந்துகள் மீதம் இருக்க 2 விக்கெட்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் உபாதைக்குள்ளான 3 வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக இணைந்த மூவர் நேற்றைய போட்டியில் விளையாடினர். அவர்களில் இருவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி அடையச் செய்தனர்.

இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ப்ளே ஓவ் சுற்றுக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சென்னை சுப்பர் கிங்ஸின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் 5 விக்கெட்கள் பவர் ப்ளே நிறைவடைவதற்குள் சரிந்ததுடன் 5.2 ஓவர்களில் அதன் மொத்த எண்ணிக்கை 60 ஓட்டங்களாக இருந்தது.

இதன் காரணமாக சென்னை சுப்பர் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் வலுத்தது.

ஆனால், அறிமுக வீரர் உர்வில் பட்டேல் 11 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 31 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்து டிவோல்ட் ப்றவிஸ், ஷிவம் டுபே ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்டினர்.

ப்றவிஸ் 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களை விளாசினார்.

தனது நான்காவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ப்றவிஸ் பெற்ற முதலாவது அரைச் சதம் இதுவாகும்.

தொடர்ந்து ஷிவம் டுபே, அணித் தலைவர் எம்.எஸ். தோனி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

ஷிவம் டுபே 2 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களைக் குவித்தார்.

ஷிவம் டுபே, நூர் அஹ்மத் (2) ஆகிய இருவரும் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். (172 - 8 விக்.)

கடைசி ஓவரில் சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அண்ட்றே ரசல் வீசிய கடைசி ஓவரில் தோனி ஒரு சிக்ஸ் உட்பட 7 ஓட்டங்களையும் அன்ஷுல் கம்போஜ் ஒரு ஓட்டத்தையும்   பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் வைபவ் அரேரா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

மொத்த எண்ணிக்கை 11 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து சுனில் நரேன் (26), அஜின்கியா ரஹானே (33 பந்துகளில் 48 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர்.

மத்திய வரிசையில் மனிஷ் பாண்டே (36 ஆ.இ.), அண்ட்றே ரசல் (21 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 38 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அணியை நல்ல நிலையில் இட்டனர். 

ஆனால் கடைசியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு தோல்வியே மிஞ்சியது.

பந்துவீச்சில் நூர் அஹ்மத் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: நூர் அஹ்மத்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55