அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்கள் மாத்திரமே; 170 சபைகளில் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்கும் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Published By: Vishnu

08 May, 2025 | 12:29 AM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் கூறுவது பொய் என்பது தமக்கு தெரியும் என்பதை மக்கள் இந்த தேர்தலில் உணர வைத்திருக்கின்றனர். பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு மக்கள் இந்த செய்தியை வழங்கியிருக்காவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் இவர்களின் பொய்கள் தொடர்ந்திருக்கும். எவ்வாறிருப்பினும் மக்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.

தற்போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளுராட்சிமன்றங்களில் மாத்திரமே அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த போதிலும், அவை நடைமுறையில் சாத்தியப்படவில்லை.

ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா வேறு எந்த கட்சிகளின் ஆதரவும் தமக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கோரினாலும் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பதை டில்வின் சில்வாவிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பொய் கூறி மக்களை ஏமாற்றும் உங்களுடன் இணைய வேண்டிய தேவைய எமக்கில்லை. ஆனால் கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு நாம் தயார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 67 இலட்சம் வாக்குகளை அரசாங்கம் பெற்றுக் கொண்டது. ஆனால் இம்முறை தேர்தலில் 40 இலட்சம் வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன. 6 மாதங்களில் 27 இலட்சம் மக்கள் சகோதரர் அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்துள்ளனர். எனவே இனியாவது பொய் கூறுவதை நிறுத்துங்கள். ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவை துரத்தியதைப் போன்று ஆட்சியைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. அரசாங்கம் அதன் தவறுகளை திருத்திக் கொண்டு ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58
news-image

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டத்துக்காக ஒதுக்கப்படும்...

2026-05-16 10:27:02