(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) நடைபெற்ற மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடிய இந்தியா 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து இந்தியாவும் இலங்கையும் இதே விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.
ஆறு போட்டிகள் கொண்ட இந்த மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இந்தியா 4 போட்டிகளில் 3 வெற்றிகளை ஈட்டியதுடன் இலங்கை 3 போட்டிகளில் 2 வெற்றிகளை ஈட்டியது.
தென் ஆபிரிக்கா தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததுடன் தனது கடைசி லீக் போட்டியில் இலங்கையை நாளை மறுதினம் எதிர்த்தாடவுள்ளது.
இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய இரண்டு அணிகளாலும் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட இன்றைய போட்டியில் ஜெமிமா ரொட்றிக்ஸ் குவித்த அபார சதம், தீப்தி ஷர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் இந்தியாவின் வெற்றிக்கு அடிகோலி இருந்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 337 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 50 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் 28 ஓட்டங்களுடன் 3ஆவதாக வெளியேறினார்.
ஆனால், ஸ்ம்ரித்தி மந்தனாவுடன் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மாவுடன் 5ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் பகிர்ந்து இந்திய அணியை பலமான நிலையில் இட்டார்.
ஸ்ம்ரித்தி மந்தனா 51 ஓட்டங்களைப் பெற்றார்.
ஜெமிமா ரொட்றிக்ஸ் 101 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார். தனது 46ஆவது போட்டியில் விளையாடிய ஜெமிமா குவித்த இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதம் இதுவாகும்.
தீப்தி ஷர்மா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 90ஆவது இன்னிங்ஸில் 13ஆவது அரைச் சதத்தைக் குவித்து அணியை பலப்படுத்தினார்.
அவர் 84 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 93 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் ரிச்சா கோஷ் 20 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் தென் ஆபிரிக்கா 8 வீராங்கனைகளைப் பயன்படுத்தியது. அவர்களில் மசாபட்டா க்ளாஸ், நாடின் டி கிளார்க், நொன்குலுலேக்கோ மிலாபா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
338 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஏழு வீராங்கனைகள் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற போதிலும் அவர்களில் இருவரைத் தவிர வேறு எவரும் பெரிய எண்ணிக்கைகளைப் பெறவில்லை.
ஆன்ரி டேர்க்சன் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 81 ஓட்டங்களையும் அணித் தலைவி க்ளோ ட்ரியோன் 43 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட மியேன் ஸ்மித் 39 ஓட்டங்களையும் நொண்டுமிசோ ஷங்கேஸ் 36 ஓட்டங்களையம் தஸ்மின் ப்றிட்ஸ் 22 ஓட்டங்களையும் நாடின் டி க்ளார்க் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் சினாலோ ஜவ்டா 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆமன்ஜோத் கோர் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிக்ஸ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM