பச்சிளம் குழந்தைகளின் தீரா அழுகைக்கு நிவாரணமளிக்கும் சிகிச்சை முறை

Published By: Digital Desk 2

07 May, 2025 | 05:36 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளம் தம்பதிகளுக்கு பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் இரண்டு மாதத்தை கடந்த பிறகு காரணமே இல்லாமல் அதிக அளவில் அழத் தொடங்கும்.

இது பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை சமாதானப்படுத்த தெரியாமல் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியரிடம் காண்பித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

இத்தகைய அழுகை பாதிப்பிற்கு மருத்துவ முறையில் காலிக் ( Colic baby crying) என குறிப்பிடுகிறார்கள். பச்சிளம் குழந்தைகள் பிறந்து இரண்டு மாதமான நிலையில் அவர்கள் தாய்ப்பாலை ஆரோக்கிய உணவாக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்நிலையில் சில தாய்மார்கள் தாய்ப்பாலையும், பால்மா பவுடரையும் இணைந்து வழங்க தொடங்குகிறார்கள்.

இந்நிலையில் சில பிள்ளைகள் மாலை நேரத்தில் திடீரென்று அழத்தொடங்கும். சில தருணங்களில் இத்தகைய அழுகை மூன்று மணி தியாலம் வரை கூட நீடிக்கும். இத்தகைய தருணங்களில் பிள்ளைகளின் அழுகைகளை அடக்க தெரியாமல் பெற்றோர்களும் திணறுவார்கள்.

சில பிள்ளைகள் வலியில் துடிப்பது போல் அழுவார்கள். சில தருணத்தில் பல்வேறு காரணங்களால் குழந்தைகள் அழத் தொடங்குவார்கள்.

செரிமான மண்டலத்தில் ஏற்படும் குறைபாடு காரணமாகவே குழந்தைகள் அழுகிறார்கள். இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்த ஆய்வினை மேற்கொள்வார்கள்.

இதனுடன் செரிமான மண்டல தொடர்பான குறைபாடுகளுக்கும் ஒவ்வாமை குறைபாடுகளுக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவார்கள். அதன் பிறகு குழந்தை அழுவதை குறைத்து சிரிக்கத் தொடங்கும்.

வைத்தியர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான நவீன...

2026-06-08 17:01:59
news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15
news-image

ஃபோர்னியர் கேங்க்ரீன் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-05-30 17:09:30
news-image

சர்க்கரை நோயாளிகளுக்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2026-05-29 18:11:40
news-image

பெல்விக் இன்ஃப்ளமேட்ரி டிசீஸ் எனும் நோய்...

2026-05-28 14:59:49
news-image

கால் ஆணி பாதிப்பிற்குரிய நவீன நிவாரண...

2026-05-29 11:52:55
news-image

மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இரத்த...

2026-05-25 16:41:07