உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025 இல் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அதிகப்படியான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியானது 4,503,930 வாக்குகளையும் 3,927 உறுப்பினர்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது நிலையாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளையும் 1,767 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 4.94 மில்லியன் வாக்குகளைப் பெற்று நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2025இல் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்களை பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது.
2018இல் களத்தில் இறங்கி 693,875 வாக்குகளைப் பெற்றும், பலமற்ற கட்சியாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 43.26 வீத வாக்கு எண்ணிக்கையான 4,503,930 வாக்குகளையும் 3927 உறுப்பினர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM