பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; பாதாள உலக கும்பல் தலைவரின் சகாக்கள் கைது

07 May, 2025 | 11:17 AM
image

பாணந்துறை - ஹிரண பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பாதாள உலக கும்பல்  தலைவரின் சகாக்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திங்கட்கிழமை (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு - கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனியன் பிளேஸில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மருதானை மற்றும் கொழும்பு 13 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 மற்றும் 25 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை - ஹிரண பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக்கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிகளுக்கு துப்பாக்கி மற்றும் வேன் வழங்கி உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனிவீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05