இலங்கை கிரிக்கட் அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு வைரஸ் நோய் தொற்றியுள்ளமையினால் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வைரஸ் நோய் தொற்றியுள்ளமையினால் 48 மணித்தியாலங்கள் ஓய்வு எடுக்குமாறு லசித் மலிங்கவிற்கு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்கமைய,  நாளைய தினம் சிம்பாபே அணியுடன் காலியில் இடம்பெறவுள்ள போட்டியில் மலிங்க விளையாடமாட்டார் என கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.