தி வெர்டிக்ட் 'பட கிளர்வோட்டத்தில் சட்டத்தரணியாக மிரட்டும் நடிகை வரலட்சுமி சரத்குமார்

06 May, 2025 | 04:00 PM
image

மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட சமூக வலைதள பின்தொடர்பவர்களை கொண்டிருக்கும் தமிழ் நட்சத்திர நடிகையான வரலட்சுமி சரத்குமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' தி வெர்டிக்ட் 'எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகையும் , தயாரிப்பாளருமான குஷ்பூ சுந்தர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் கிருஷ்ண சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ' தி வெர்டிக்ட்' . இதில் வரலட்சுமி சரத்குமார், சுருதி ஹரிஹரன், சுகாசினி மணிரத்தினம், வித்யூலேகா ராமன், பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதித்யா ராவ் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை அக்னி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மோகன்தாஸ் -  என். கோபி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் இந்தியாவிற்கு வெளியே உள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் குற்ற சம்பவம் தொடர்பான விசாரணையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சட்டத்தரணியாக தோன்றுவதும், அவர் நீதிமன்றில் வாதாடுவதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.

அதிலும் சுகாசினி மணிரத்னம் நடக்க இயலாமல் பிரத்யேக வாகனத்தில் அமர்ந்து கொண்டு பேசுவது ரசிகர்களை படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கூடுதலாக தூண்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right