தங்க நகை ஆபரணங்களை சேமிப்பதற்கான பிரத்யேக வழிபாடு

06 May, 2025 | 03:57 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் நாளாந்தம் விலை உயர்வினை கண்டு வரும் தங்க நகைகளை சேமித்து, தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

மேலும் சிலர் தங்களுடைய புலம்பெயர் பயணத்தின் போது தங்க நகையை அணிந்து செல்வதில் அக்கறை காட்டுகிறார்கள். 

இந்த நகைகளை புலம் பெயர்ந்து செல்லும் நாடுகளில் விற்பனை செய்து அதனூடாக தங்களுடைய வாழ்வாதாரத்தை எதிர்கொள்கிறார்கள். 

மேலும்  தங்கம் என்பது  நவ கிரகங்களில் குருவை குறிப்பதால் இதன் மீது அதிக ஆர்வம் காட்டுபவர்களும் உள்ளனர். 

இந்த தருணத்தில் அடவு கடையில் வைத்திருக்கும் தங்க நகையை மீட்கவும், புதிதாக தங்க நகையை வாங்கி சேமிக்கவும், தங்க நகை தங்களிடமே தங்குவதற்காகவும் எம்முடைய முன்னோர்கள் சில சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : மூன்று மஞ்சள் வண்ண துணி, சதுர வடிவிலான மஞ்சள் வண்ண துணி, கொண்டைக்கடலை மாலை, நெய் தீபம், மஞ்சள் திரி.

வியாழக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள நவ கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி கொண்டை கடலை மாலையை படைத்து தங்க நகை சேமிப்பு குறித்த உங்களுடைய கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து சிவாலயத்தில் மூலவரின் கோஷ்டத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தலையில் ஒரு துண்டு- தோளில் ஒரு துண்டு- இடுப்பில் ஒரு துண்டு -என மூன்று மஞ்சள் வண்ண துண்டு துணிகளை சாற்ற வேண்டும்.

அதன் பிறகு கொண்டைக்கடலை மாலையை அணிவிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து மூன்று நெய் தீபங்களை மஞ்சள் திரி போட்டு ஏற்றி உங்களுடைய தங்க நகை குறித்த கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த நிலையில் உங்களிடம் ஒரு கிராம் அளவிற்கு தங்க நாணயம் இருந்தால்.. அதனை ஒரு சதுர வடிவிலான மஞ்சள் வண்ண துணியில் முடிச்சிட்டு, அதனை குரு பகவானின் மடியில் வைத்து ஆசி பெற வேண்டும். 

அதன் பிறகு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து அந்த மஞ்சள் வண்ண துணியில் முடிச்சிடப்பட்டிருக்கும் தங்க நாணயத்தை ஆலயத்தில் இருந்து வாங்கி வந்து உங்களுடைய பணப் பெட்டியில் வைத்து விட வேண்டும் . 

இதனையும் வியாழக்கிழமையில் குரு ஹோரையில் செய்தால்.. உங்களுடைய வீட்டில் தங்க நகை தங்கத் தொடங்கி பெருக தொடங்கும்.

 ஐந்து ஆண்டுகளுக்குள் நீங்கள் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு தங்க நகை சேமிப்பு உங்களிடத்தில் இருக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தன வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-05-12 15:00:56
news-image

கேது தோஷத்தை நீக்குவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-05-11 17:02:59
news-image

கடன் தீர்வதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-05-07 14:47:36
news-image

வீட்டில் செல்வ வளத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பு..!?

2026-05-06 18:13:58
news-image

உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்ற பரஞ்சோதி...

2026-05-06 18:06:01
news-image

ஞான வள்ளல் பரஞ்சோதி மகானின் 126...

2026-05-05 17:38:08
news-image

ஆயுளை அதிகரிப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!

2026-05-02 17:01:33
news-image

சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கான வழிமுறை..!?

2026-05-01 15:39:30
news-image

மே மாத ராசி பலன்கள் -...

2026-04-30 14:02:52
news-image

கணவன் -மனைவி இடையேயான கருத்து வேறுபாடு...

2026-04-29 18:43:14
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-04-27 15:16:14
news-image

பண தட்டுப்பாடு நீங்குவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-04-25 17:09:58