தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு - அனைவரையும் மகிழ்விக்கச் செய்யும் மாய ஜாலம் செய்யும் வித்தைக்காரராக நடித்திருக்கும் ' ஜோரா கைய தட்டுங்க 'எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வினீஷ் மில்லேனியம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் யோகி பாபு உடன் சாந்தி ராவ் ,ஹரிஷ் பெராடி, 'அருவி' பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். என். அருணகிரி மற்றும் ஜிதின் கே. ரோஷன் ஆகியோர் இணைந்து இசைறமைத்திருக்கிறார்கள்.
கொமடி ஹாரராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாமா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜாகீர் அலி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த டீசரை தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி, ரசிகர்களிடத்தில் பிரபலமாகி, கதையின் நாயகர்களாக உயர்ந்திருக்கும் சந்தானம் - ( டி டி நெக்ஸ்ட் லெவல்) சூரி- ( மாமன்) யோகி பாபு ( ஜோரா கைய தட்டுங்க) ஆகிய மூவரும் நடித்திருக்கும் திரைப்படங்கள் ஒரே திகதியில் வெளியாவதால் தமிழ் திரையுலகில் ஆரோக்கியமான நகைச்சுவை போட்டி நடைபெறுகிறது என இதனை குறிப்பிடுகிறார்கள்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM